/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/harees.jpg)
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கிவருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில்,அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சென்னை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பைக் கோயம்புத்தூரில்நடத்திவருகிறது. இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தில் பிரபல மலையாள நடிகர்ஹரீஷ் பேரடி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாககூறப்படுகிறது. தமிழில் ‘சுல்தான்’, ‘கைதி’, ‘தம்பி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களில்நடித்துள்ள இவர், விரைவில் கோயம்புத்தூரில்நடந்துவரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.நடிகர்ஹரீஷ் பேரடி சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கேயே படமாக்கப்பட உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் முதல் பார்வை வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, யூடியூப் தளத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)